விஜய்யின், தெறி இந்தியில் ரீமேக் ஆகிறது.. வருண் தவான் ஹீரோ..

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான படம் தெறி. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்க உள்ளதாகவும் அட்லீயே இயக்க விருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டில் ஷாருக்கான் நடிக்க மறுத்து விட்டதால் அவருக்காக அட்லீ புது ஸ்கிரிப்ட் ரெடி செய்து வருகிறார். இந்நிலையில், 'தெறி' ரீமேக்கில் இந்தி நடிகர் வருண் தவான் நடிக்க ஆர்வம் தெரிவித்திருக்கிறாராம். ஆனால் படத்தை அட்லீக்கு பதில் வேறு இயக்குனர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

More News >>