ஜீவி.பிரகாஷ் வெளியிட்ட சூர்யாவின், காட்டுப் பயலே..

இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிகர் ஆன பிறகு படங்களுக்கு இசை அமைப்பதைக் குறைத்துக்கொண்டார். ஆனாலும் பெரிய படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு வரும்போது ஏற்கிறார். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்கு இசை அமைத்தார். தற்போது சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று படத்துக்கு இசை அமைக்கிறார். இப்படத்தைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். சூரரைப்போற்று படத்திலிருந்து ஏற்கெனவே மாறா தீம் பாடல். வேயோன் சில்லி மற்றும் மண்ணுருண்டா பாடல்களை பிரகாஷ் வெளியிட்டார். தற்போது, காட்டுப் பயலே என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். இதனை பாடலாசிரியர் சினேகன் எழுதி உள்ளார்.

More News >>