மேங்கோ ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஹீரோ..

அர்ஜுன் ரெட்டியில் நடித்த விஜய் தேவரகொண்டா இளவட்டங்களை தன்பக்கம் வளைத்துப் போட்டிருக்கிறார். தமிழில் நோட்டா, டியர் காம்ரேட் படங்களில் நடித்திருந்தார். பிஸியான நடிகர் விஜய் தேவரகொண்டா கொரொனா லாக்டவுனில் வீட்டில் இருக்கிறார். காலையில் 11.45 மணிக்குத் தான் எழுந்துகொள்கிறாராம். இதுபோல் மற்றவர்கள் செய்ய வேண்டாம் அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்காதீர்கள் என்று அட்வைஸ் செய்திருப்பதுடன் சமையல் அறைக்குச் சென்று பாட்டில்களில் தண்ணீர் நிரப்புகிறார். பின்னர் மாம்பழம் ஒன்றை எடுத்து மிக்ஸியில் போட்டுக் கலக்கி அதில் சர்க்கரை கலந்து ப்ரீஸரில் வைத்து மேங்கோ ஐஸ்கிரீம் தயாரித்து அம்மா, தம்பிக்கு தருகிறார். இதற்கிடையில் டிவி, ஜாய் ஸ்டிக்கை துடைத்து சிறிது நேரம் கேம் விளையாடுகிறார். இந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் விஜய்தேவர கொண்டா . வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், ஒருவருக்கொருவர் உதவுங்கள். நல்ல பிள்ளையாக, நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்று சரளமாகப் பல அட்வைஸ்கள் செய்திருக்கிறார்.

More News >>