ஒடிடி தளம்: தேசிய விருது இயக்குனர் புதிய பார்வை.. இது நிஜமா?

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்திருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்கப்பட்டிருக்கிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டால் அந்த பட நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. பொன்மகள் வந்தாள் படம் பல கோடிக்கு ஓடிடி தளம் விலைக்கு வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஓடிடி தளம் சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமானது எனத் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி கூறி உள்ளார். ஒடிடி, இது விஞ்ஞான மாற்றம், இதை இப்போது விரைவுபடுத்தியிருக்கிறது கொரோனா. சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு லாபம், நிறைய புதிய கலைஞர்கள், புதிய கதைகள் என சினிமாவின் தரமும் உயரும், தியேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்டோரின் படங்களை உலகம் பார்க்கப் போகிறது என நினைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இது நிஜமா? சிறுபடதயாரிப்பாளர்களின் படங்களை ஒடிடி தளத்தினர் முதலில் வாங்குவார்களா? என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள் என ஒரு சிலர் இயக்குனரிடம் கேட்டிருக்கின்றனர்.

More News >>