ரஜினியுடன் நடிக்க மறுக்கும் நடிகை? இளம் நடிகையின் குறும்புத்தனம்..

ஆர்டி எக்ஸ் 100 தெலுங்கு படத்தில் நடித்தவர் பாயல் ராஜ்புத். தமிழில் ஏஞ்சல் படம் மூலம் அறிமுகமாகிறார். இவர் கொரோனா லாக் டவுனில் வீட்டிலிருப்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார். அவரிடம் ஒரு ரசிகர், நீங்கள் ரஜினியுடன் நடிப்பீர்களா? என்று கேட்டதற்குக் கையெடுத்துக் கும்பிடுவதுபோல் ஒரு படத்தைப் பதிலாகப் பகிர்ந்திருக்கிறார். ஆளை விட்டால் போதும் என்று சொல்கிறாரா, அப்படியொரு வாய்ப்பு வந்தால் கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்பேன் என்கிறாரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More News >>