மலையாள குணசித்ர நடிகர் காலமானார்.. முதல்வர் இரங்கல்..

வெட்டிங்டே, ராவணன், மதிலுகல், நயணங்கல் உள்ளிட்ட ஏராளமான மலையாள திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்தவர் ரவி வல்லத்தோல். இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார். மறைந்த ரவி வல்லத்தோலுக்கு 67 வயதாகிறது. இவருக்கு கீதாலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். ரவி வல்லத்தொல் மறைவுக்குக் கேரள முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

More News >>