பிரதமர் ஆலோசனைக் கூட்டம் பினராயி விஜயன் புறக்கணிப்பு..

பிரதமர் மோடி இன்று நடத்திய முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் புறக்கணித்தார்.நாடு முழுவதும் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். இதில், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்வர்கள் பங்கேற்றனர். அதே சமயம், கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை . கேரள மாநிலத் தலைமைச் செயலாளர் கலந்து கொண்டார்.

இன்றைய கூட்டம் வடகிழக்கு மாநிலங்களைப் பற்றியது என்பதால், மற்ற முதல்வர்கள் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அதனால், பினராயி விஜயன் கலந்து கொள்ளாதது தவறில்லை என்று அம்மாநில அரசு விளக்கம் தெரிவித்தது. மேலும், கேரளாவின் ஆலோசனைகளை ஏற்கனவே மத்திய அரசுக்கு எழுத்து மூலமாக அனுப்பியுள்ளனர்.

More News >>