லாக்டவுனில் பார்ட்னரை கட்டிப்பிடித்துத் தூங்கும் நடிகை..

நடிகை சார்மியை ஞாபகமிருக்கிறதா காதல் அழிவதில்லை படம் மூலம் அறிமுகமானவர். பிறகு, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு, லாடம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் படங்களில் நடிக்கச் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். இயக்குனர் புரி ஜெகநாத்துடன் தொடர்பு ஏற்பட்டு அவர் தயாரிக்கும் படங்களில் பார்ட்னராக இணைந்தார், தற்போது இரண்டு படங்கள் தயாரித்து வருகிறார். கடந்த சில வருடமாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கும் சார்மி மீண்டும் நடிக்க வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருக்கும் சார்மி அங்குத் தனது செல்ல நாய்க்குட்டிகளிடம் அன்பு காட்டி அரவணைக்கிறார். இணைய தளத்தில் ஒரு படம் பகிர்ந்திருக்கிறார், ஷோபாவில் செல்ல நாய்க்குட்டியை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துத் தூங்குகிறார் சார்மி. அதனை இன்னொரு செல்ல நாய்க்குட்டி அருகிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது, அதைக்கண்டு அழகான பார்ட்னர் அழகான படம் என்று ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.

More News >>