பிரபல இயக்குனரின் பெண் உதவி இயக்குனர் ஊரடங்கு திருமணம்..

திரையுலக நட்சத்திரங்கள் சிலர் திருமணம் செய்ய நாள் குறித்திருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை ரத்து செய்தனர். இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுஜா. சூர்யா நடித்த என்ஜிகே படத்தில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றினார். சுஜாவுக்கும் அரவிந்த்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு என்பதால் சென்னை சூளைமேட்டிலுள்ள அவரது இல்லத்திலேயே திருமணம் நடந்தது.கொரோனா ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு கருதி மணமகன் பெற்றோர், மணமகளின் பெற்றோர் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.

More News >>