டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு..

டெல்லியில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்டோர் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 29,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 6868 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 934 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் மட்டும் 3108 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 54 பேர் இந்நோய் பாதித்து இறந்துள்ளனர்.

எனினும், டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஹாட் ஸ்பாட் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் மின்விசிறி உள்பட எலக்ட்ரானிக் சாமான்கள் விற்கும் கடைகள் மற்றும் அந்தந்த பகுதியில் செயல்படும் சிறிய கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பிளம்பர், எலக்ட்ரீசியன், குடிநீர் சுத்திகரிப்பு கம்பெனி ஊழியர்கள் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெல்லியின் சில பகுதிகளில் மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

More News >>