அரசு ஊழியர் சம்பளம் கட்.. கேரள ஐகோர்ட் திடீர் தடை..

கேரள அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 6 நாள் ஊதியம் செய்யப்படும் என்று உத்தரவுக்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதிச்சுமைகளைக் குறைத்து வருகின்றன. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. கேரளா, மகாராஷ்டிரா உள்பட மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

கேரளாவில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 6 நாள் வீதம் அடுத்த 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்வதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாநில நீர்வள ஆணைய ஊழியர்கள் சங்கம், காங்கிரசின் ஐஎன்டியுசி உள்ளிட்ட சங்கங்கள், ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தன. அரசு ஊழியர்களின் ஊதிய உரிமைக்கு எதிராக மாநில அரசு செயல்படுவதாகவும், இது சட்டவிரோதமானது என்றும் மனுவில் கூறப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி குரியன் தாமஸ் தலைமையிலான அமர்வு, அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த தடையுத்தரவு குறித்து மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில், ஐகோர்ட் உத்தரவு மத்திய அரசு மற்றும் இதரமாநில அரசுகளுக்கும் பொருந்தும். எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. ரத்து செய்த பிறப்பித்த உத்தரவுக்கும் பொருந்துமா என்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றார்.

More News >>