இயக்குனர் ஆகிறாரா யோகிபாபு..

சினிமா நடிகர்கள் பலருக்கும் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒருசிலர் அதை நிறைவேற்றுகிறார்கள். சிலருக்கு அது நிராசையாகி விடுகிறது. தற்போது முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபுவும் இயக்குனர் ஆகப்போகிறார், அதற்காக அவரே ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார் என்று தகவல் பரவியது. இது குறித்து அவர் கூறும்போது,நான் ஒரு ஸ்கிரிப்ட் எழுதுவது உண்மைதான். ஆனால் அப்படத்தை நான் இயக்கவில்லை. இப்படத்திற்கான தொடக்க விழா வரும் தை மாதம் நடக்கும் என்றார் யோகிபாபு.

More News >>