கபில்தேவ் படத்தை வெளியிடக் காத்திருக்கும் கமல்ஹாசன்..

இந்திய மாஜி கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 1983 ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை இந்தியா வென்றது. கபில்தேவ் வாழ்க்கை கதை 83 என்ற பெயரில் உருவாகி உள்ளது. கபில்தேவ் வேடத்தை இந்தி நடிகர் ரன்வீர்சிங் ஏற்று நடித்துள்ளார். அவரது மனைவியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தை நடிகர் ஜீவா ஏற்று நடித்துள்ளார். இப்படத்தை கபீர் கான் இயக்கி உள்ளார். ஏப்ரல் 10ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிபோயிருக்கிறது.

இந்நிலையில் 83 படத்தை ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய மிகப்பெரிய தொகை விலை தருவதாகப் பேசப்பட்டது. ஆனால் அதை படத் தரப்பு ஏற்கவில்லை. முதலில் தியேட்டரில் ரிலீஸ் செய்த பிறகுதான் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்வோம் என்று கூறிவிட்டது. இப்படத்தின் தமிழ் உரிமையை கமல்ஹாசன் மற்றும் ஓய் நாட் ஸ்டுடியோ பெற்றிருக்கிறது. இந்தி, தெலுங்கு மற்ற மொழிகளில் ரிலீஸ் செய்யும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.

More News >>