தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2162 ஆக அதிகரிப்பு.. சென்னையில் 768 பேருக்கு தொற்று..

தமிழகத்தில் தொடர்ந்து சென்னை மாநகர், கொரோனா அதிகம் பாதித்த ஹாட்ஸ்பாட் ஆக உள்ளது. இங்கு 768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.29) 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2162 ஆக இருந்தது. தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாகப் பாதித்தவர்களில் 63 பேர் ஆண்கள், 41 பேர் பெண்கள் ஆவர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 7886 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் ஒரு லட்சத்து 1075 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இது வரை 1210 பேர் குணமடைந்துள்ளனர்.சென்னையில் தான் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. நேற்று புதிதாக 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 768 ஆனது. இது தவிரச் செங்கல்பட்டில் புதிதாக 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.கோவையில் 141, திருப்பூர் 112, திண்டுக்கல் 80, ஈரோடு 70, நெல்லை 63, நாமக்கல் 59, செங்கல்பட்டு 58, தஞ்சை 55, திருவள்ளூர் 53, திருச்சி 51 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது.

More News >>