மூச்சுத்திணறல்: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..
1970களில் திரையுலகுக்கு வந்தவர் ரிஷி கபூர். பாபி என்ற இந்தி படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் ஜோடியாக நடித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்தியில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் ரிஷிகபூருக்கு தற்போது 67 வயது ஆகிறது. ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று இந்தியா திரும்பினார்.
இந்நிலையில் நேற்று ரிஷி கபூருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர், டாக்டர்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலை தேறியிருப்பதாக குடும்பத்தினர் கூறினார்.சமீபத்தில்தான் ரிஷிகபூர் ஹாலிவுட் படம். தி இன்டர்ன் இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோனுடன் நடிக்கவிருப்பதாக அறிவித்தார். மறைந்த இந்தி பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் ராஜ் கபூரின் 2வது மகன் ரிஷி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.