10,000 சாதனையை படைத்த ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் போட்டிகளில் 10 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளில் 10ஆயிரம் ரன்கள் குவித்த 13ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஆனால், அதே சமயம் 50 மேற்பட்ட சராசரிகளை கொண்டு 10ஆயிரம் ரன்கள் குவித்தவர்கள் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலி, 365 இன்னிங்ஸ்களில் 17,125 ரன்களும் [சராசரி- 55.60], இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 241 இன்னிங்ஸ்களில் 10,770 ரன்களும் [சராசரி- 50.80] எடுத்துள்ளனர்.
ஸ்டீவ் ஸ்மித் 113 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடி 6,151 ரன்களும், 94 ஒருநாள் போட்டிகளில் 3,431 ரன்களும், 25 டி 20 போட்டிகளில் விளையாடி 431 ரன்களும் குவித்துள்ளார்.
அதேபோல் இந்த டெஸ்ட் மூலம் மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அவர் தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் பந்துவீச்சில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் எல்கர் பந்தில் இரண்டாவது முறையாக ஆட்டமிழந்த ஒரே வீரர் என்ற மோசமான பெருமையையும் பெற்றுள்ளார்.