தமிழகத்தில் ஊரடங்கைத் தளர்த்த வாய்ப்பில்லை.. மருத்துவ நிபுணர் தகவல்
தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாகத் தளர்த்த வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்தார்தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்தது. தற்போது மே3ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவது இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில், ஊரடங்கைத் தளர்த்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று விவாதித்தார். இதன் பின்னர், மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்த வாய்ப்பில்லை.
கொரோனா தொற்று நீண்ட நாட்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். நாம்தான் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிவதைப் பின்பற்ற வேண்டும்.கொரோனா பரவல் குறித்துத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடத்திய பிறகே அடுத்த கட்ட முடிவு செய்யப்படும். சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும். அதேசமயம், ஊரடங்கை முழுவதுமாக தளர்த்த முடியாது” என்றார். எனவே, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட கொரோனா அதிகம் பாதித்த மாநகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.