6 மாதத்துக்குப் பிறகு குழந்தையை அறிமுகம் செய்த, கேஜிஎப் ஹீரோ யஷ்..

கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்ற கேஜிஎப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் யஷ். இவர் தற்போது கேஜிஎப் 2ம் பாகம் நடித்து வருகிறார். இவரது மனைவி ராதிகா பண்டிட் இவர்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் 2வது குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் படத்தை வெளியிடாமல் வைத்திருந்தனர். 6 மாதத்துக்குப் பிறகு குழந்தையின் படத்தை ரசிகர்களுக்காகப் பகிர்ந்திருக்கின்றனர்.

இதுபற்றி யஷ் கூறும்போது,என் குழந்தையை ஆசீர்வாதம் செய்யுங்கள் என குறிப்பிட்டிருக்கிறார். மனைவி ராதிகா பண்டிட் கூறும்போது.என்னுடைய கண்மணியை அறிமுகம் செய்கிறேன். என் குடும்பத்தின் வானவில். உங்கள் அனைவரின் வாழ்த்தும் குழந்தைக்கு வேண்டும் என்றார்.

யஷ் குழந்தைக்கு நடிகை அமலா, நாகார்ஜுனா தம்பதி மகனும் நடிகருமான அகில் அக்கினேனி வாழ்த்துக் கூறி உள்ளார். அதில்,வாழ்த்துக்கள். உன் தந்தையின் இடத்தில் நிற்க நீ கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் நீ தீயாக இருப்பாய் என்பது உறுதிஎனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>