அஜீத் பிறந்தநாளுக்கு ஹேஷ்டேக் உருவாக்கிய விஜய் ரசிகர்கள்..

உன்னையாரோ பெத்திருக்கா என்னை யாரோ பெத்திருக்கா ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிதான் என்று ஒரு படத்தில் விஜய் பாடினார், விஜய், அஜீத் ரசிகர்கள் எதிரும் புதிருமாக இணைய தளத்தில் எப்போதும் மோதிக்கொள்வதுண்டு. ஆனால் அசாதாரண நேரங்களில். விஜய்க்கோ அஜீத்துக்கோ ஏதாவது பிரச்சனை என்றால் இரண்டு ரசிகர்களும் அண்ணன் தம்பிபோல் சேர்ந்து எதிர்க் குரல் கொடுப்பது அவ்வப்போது நிகழ்கிறது.இம்முறை சற்று வித்தியாசமாக நடந்திருக்கிறது.

விஜய் ரசிகர்கள் #நண்பர் அஜீத் (#NanbarAjith) என்ற ஹேஷ் டேக் உருவாக்கி அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இணையதளத்தில் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது பற்றி சில நடிகைகள் அவ்வப்போது விமர்சனம் செய்து வந்தனர். அவர்களுக்கு இந்த ஹேஷ்டேக் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தனது பிறந்த நாள் விழாக்கள் கொண்டாட வேண்டாம், இணையத்திலும் ஹேஷ்டேக் எதுவும் உருவாக்க வேண்டாம் என அஜீத் கூறியிருந்தார், ஆனாலும் அஜீத் ரசிகர்கள் #HDBDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக் உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர்.

More News >>