மணத்தக்காளிக்கீரை மற்றும் பழம் சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்..
மணத்தக்காளிக்கீரை மற்றும் பழம் சாப்பிடுவதால் எற்படும் பயன்கள் குறித்து கீழே பார்ப்போம்..
மணத்தக்காளிக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன.
மணத்தக்காளிக்கீரையின் சாறு காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் கை, கால் வலிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
உடல் சு+டு அதிகம் உள்ளவர்கள் மணத்தக்காளிக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் குளிர்ச்சியாகும்.
மணத்தக்காளிக்கீரை மற்றும் பழத்தினை காய வைத்துப் பொடி செய்து, தினமும் காலை மற்றும் மாலையில் அரை ஸ்பு+ன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு இதயமும் வலிமையடையும்.
வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளிக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
மணத்தக்காளிக்கீரை கருப்பையில் கருவலிமை பெறுவதற்கு உதவுகிறது.