விரதம் இருந்து நயன்தாரா நடித்த பக்தி படம்.. கொரோனா தடையால் பாதிப்பு..

ரேடியோ ஜாக்கியாக இருந்து திரையுலகுக்கு வந்தவர் ஆர் ஜே. பாலாஜி இவன் தந்திரன், நானும் ரவுடிதான், எல் கே ஜி போன்ற படைகளில் நடித்துள்ளார். திடீரென்று நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குனர் ஆனார். பக்தி படமாக உருவாகியிருக்கும் இதில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இதற்காக அவர் விரதம் இருந்து நடித்தார். இப்படம் வேகமாக நடந்து முடிந்தது. படம் எப்போது வெளியாகும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இன்ஸ்டாகிராமில் லைவ் நிகழ்ச்சி ஒன்றில் தோன்றி பேசினார் ஆர் ஜே பாலாஜி. அப்போது மூக்குத்தி அம்மன் படம் கொரோனா ஊரடங்கு இல்லாமலிருந்திருந்தால் மே 1ம் தேதி ரிலீஸ்ஆகியிருக்கும்' என்றார்.

More News >>