கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு.. ஆரஞ்சு மண்டலமானது..

கிருஷ்ணகிரியில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் இது வரை கொரோனா நோய் பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்தது. இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இவர் உள்பட 4 பேர் ஆந்திரமாநிலம் புட்டப்பர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று விட்டு கடந்த வாரம் திரும்பியிருக்கிறார்கள். அப்போது மாவட்ட எல்லையில் இவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், நால்வரையும் தனிமைப்படுத்தி, மருத்தவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது இவரது உறவினர்கள் 8 பேர் உள்பட அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று உறுதியானதால், இந்த மாவட்டம் தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற்றப்பட்டது. இதனால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாது. மேலும், மற்ற கட்டுப்பாடுகளும் நீடிக்கும் என்று கூறப்பட்டது.

More News >>