நஸ்ருதீன் ஷா பற்றி வதந்தி.. பாலிவுட்டில் பரபரப்பு...

கொரோனா லாக் டவுனில் கோலிவுட், பாலிவுட் ஹாலிவுட் என திரையுலகம் ஸ்தம்பித்திருக்கிறது. இந்நிலையில் கடந்து சில நாட்களாகப் பாலிவுட் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் பிரபல நடிகர்கள் இர்பான்கான், ரிஷிகபூர் என இரண்டு சாதனை நடிகர்கள் மரணம் அடைந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மற்றொரு பிரபல நடிகரான நஸ்ருதீன் ஷா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுவதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பலரும் நஸ்ருதீன் உடல் நிலை குறித்து அவரது வீட்டுக்கு போன் செய்து துக்கம் விசாரிக்கத் தொடங்கினர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.நஸ்ருதீன் ஷா மனைவி ரத்னா பதக் இதுகுறித்து கூறும்போது , ' நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம், நன்றி ' என்றார்.மகன் விவான் ஷா கூறும் போது, 'என் தந்தை நலமாக உள்ளார். அவரை பற்றி வரும் தகவல்கள் வெறும் வதந்தி 'என்றார். ஆனாலும் வதந்தி ஓயவில்லை. இதையடுத்து நஸ்ருதீன்ஷாவே ஃபேஸ் புக் பக்கத்தில் விளக்கம் அளித்தார். , 'ஊரடங்கு காரணமாக நான் வீட்டில் இருக்கிறேன் என்னைப்பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். என்னைப்பற்றி விசாரித்தவர்களுக்கு நன்றி ' என்று சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

More News >>