குடிகார குரங்கு வீடியோ வெளியிட்டு கலாய்த்த நடிகர்.. பிரேம்ஜி ரிப்பளை..

கயல் படத்தில் நடித்த சந்திரன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ குபீர் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது. என்னுடைய சக குடிமகன் என்று தலைப்பிட்டு அந்த வீடியோவை நடிகர்கள் பிரேம்ஜி, நிதின் சத்யா, வெங்கட் பிரபு போன்ற சிலருக்கு பகிர்ந்த்திருக்கிறார்.குடிபோதையில் இருக்கும் ஒருவனைப்போல் ஒரு குரங்கு தூண் ஒன்றில் சாய்ந்தபடி தூங்க அதைக் கையை தொட்டு எழுப்பினாலும் கண்ணைத் திறந்து லேசாகப் பார்த்துவிட்டு மீண்டும் தூங்கி விடுகிறது. அதற்கு ஏற்ப, 'ஆடிய ஆட்டமென்ன தேடிய செல்வமென்ன..' என்ற பாடலை தவழ விட்டிருக்கிறார்கள்.அந்த வீடியோவுக்கு பதில் அளித்த பிரேம்ஜி, 'சத்திய சோதனை' என்று கவுண்டமணி சொல்வது போல் வீடியோ கிளிப் வெளியிட்டிருக்கிறார்.

More News >>