ஆஸ்கர் விருது விதியை மாற்றிய கொரோனா..

சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கடுமையான கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ஹாலிவுட் படங்கள் எதுவும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பல படங்கள் ஒ டி டி தளத்தில் வெளியாகி உள்ளது. தியேட்டரில் 5 நாட்களாவது திரையிடப்பட்ட படங்கள் மட்டுமே வெளியாகி ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க முடியும். ஒ டி டி தளத்தில் வெளியான படங்கள் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதை யடுத்து ஆஸ்கர் விதிமுறையை மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கொரோனா பாதிப்பால் தியேட்டரில் வெளியாகாமல் ஒ டி டி தளத்தில் வெளியான படங்கள் ஆஸ்கர் போட்டியில் பங்கே ற்களாம். ஆனால் அப்படி வெளியான படங்கள் தியேட்டரில் வெளியிடுவதற்கு திட்டமிட்ட படங்களாக இருக்க வேண்டும் எனவும் இந்த விதிமாற்றம் தற்காலிகமானதுதான் எனவும் கூறப்பட்டுள்ளது.

More News >>