”கயல்” நடிகை திடீர் விவாகரத்து.. காதல் கணவரை ஒரு வருடத்தில் பிரிந்தார்..

”கயல்” என்ற தமிழ்ப் படத்தில் நடித்தவர் மேக்னா வின்சென்ட். இப்படத்தைப் பிரபு சாலமன் இயக்கினார். இதில் சந்திரன் ஆனந்தி ஆகியோரும் நடித்தனர். இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் மேக்னாவுக்கு படங்களில் நடிக்கத் தொடர்ந்து வாய்ப்பு வரவில்லை. இதையடுத்து டிவி சீரியல்களில் நடிக்க வந்தார் மேக்னா. அது கைகொடுத்தது பொன்மகள் வந்தாள், அவளும் நானும், தெய்வம் தந்த வீடு போன்ற சீரியல்களில் நடித்தார்.

மேக்னா வின்சென்ட், டான் டோமி என்பவருடன் காதல் கொண்டார். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். கடந்த 2017ம் ஆண்டு மேக்னா, டான் டோமி திருமணம் கேரளாவில் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் சமாதானம் செய்தனர், ஆனாலும் பிரச்சனை தீரவில்லை . இதையடுத்து விவாகரத்து செய்ய முடிவு செய்து கோர்ட்டுக்கு சென்றனர். இதற்கிடையில் இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தற்போது கோர்ட் இருவருக்கும் சட்டப்படி விவகாரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

More News >>