பல்கலையில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த்

சென்னை: எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

சென்னை, வேலப்பன் சாவடியில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தினுள் தாய்மூகாம்பை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் கல்லூரிகள் சில இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளின் 30ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலை குறித்து தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் கலந்துக் கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும் என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அவர் என்ன உரையாற்றப் போகிறார், மற்றவர்களின் கேள்விகளுக் கு என்ன பதிலடி கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஜினிக் கு வழிநெடு எங்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, ஈவேரா நெடுஞ்சாலையில் பதாகைகள், தோரணங்கள் கட்டி அவரது ரசிகர்கள் திரளாக கூடி நின்று வரவேற்றனர்.

இதையடுத்து, பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் முழு உருவ வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். பின்னர், எம்ஜிஆர் பெயரிலான விருதுகளையும் அவர் வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் மாணவ மாணவரிடையே கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More News >>