தளபதி 65 பட குழப்பம்: சூர்யா பட இயக்குனர் விளக்கம்..

தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய்யின் தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பது உறுதியாகாத நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவின் டிவிட்டர் பக்கத்தில், தளபதி 65 பட அறிவிப்பை அவரது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி எதிர்பாருங்கள் என்று ஒரு மெசேஜ் வெளியானது. இது குறித்து அந்த இயக்குனர் விளக்கம் அளித்திருக்கிறார்.

சுதாகொங்கரா கூறும்போது,டிவிட்டரிலோ வேறு சோஷியல் மீடியாவிலோ எனக்குக் கணக்கு இல்லை. அப்படி இணைந்தால் அதுபற்றி முறைப்படி நானே தெரிவிப்பேன். என் பெயரிலான போலிக் கணக்கைப் பின்தொடர்ந்து யாரும் நேரத்தை வீணடிக்காதீர்கள். வீட்டிலிருங்கள், வீட்டிலேயே எப்படி உங்களை பிஸியாக வைத்திருக்க முடியுமோ அந்த வேலையைச் செய்யுங்கள். கொரோனா வைரஸ் தடை காலத்துக்கு பிறகான வாழ்க்கை குறித்துத் திட்டமிடுங்கள் என தெரிவித்திருக்கிறார்.சுதா கொங்கரா தற்போது சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>