தளபதி விஜய், தல அஜீத் யாரை பிடிக்கும்.. பிரபல நடிகை பளிச் பதில்..

நடிகை ராசி கண்ணா தெலுங்கு திரையுலகிலிருந்து தமிழில் நடிக்க வந்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்கக் கடின உழைப்புக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா போன்ற படங்களில் நடித்திருக்கும் அவர் அடுத்து அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இது தவிர தெலுங்கில் 2 படங்களில் நடிக்கிறார்.

ராசி கண்ணாவிடம் இணைய தளத்தில் ரசிகர்கள் கேள்வி கேட்டபோது பதில் அளித்தார். உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்றதற்கு தளபதி விஜய் சார் என்றும், அதேபோல், சமந்தாவை பிடிக்கும் என்றும் கூறினார்.அஜீத்குமார் பற்றி அவரிடம் கேட்ட போது,தல அஜீத் ரொம்ப அழகானவர் என்றார். மேலும் ராசிகண்ணா கூறும் போது.தமிழில் வெற்றிமாறன், ஷங்கர், மணிரத்னம், அட்லி போன்ற சிறந்த இயக்குனர்கள் உள்ளனர்என்றார்.

More News >>