தற்கொலை செய்துக் கொண்ட அரியலூர் மாணவியாக நடிக்கும் ஜூலி
மருத்துவக் கனவு பலிக்காததால், தனது உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை படமாகிறது. இதில், அனிதாவாக ஜூலி நடிக்க உள்ளார்.
அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா. இவர், பிளஸ் 2ல் 1176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நீட் தேர்வில் அனிதாவால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால், மனமுடைந்து காணப்பட்ட அனிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன்பிறகு, நீட் தேர்வுக்கு தடை விதிக்கும்படி தமிழகம் முழுவதும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆர்.ஜே.பிக்சர்ஸ் யார்ல்மார்ட் சார்பில் டாக்டர்.எஸ்.அனிதா என்ற படம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு போஸ்டரை அனிதாவின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தப் படத்தில் அனிதா கதாப்பாத்திரத்தில் ஜூலி நடிக்கிறார். மேலும், அந்த போஸ்டரில் அனிதா ஸ்டெடஸ்கோப்புடன் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பது போன்று காட்சியளிக்கிறது.