கொரோனா பாதிப்பால் சம்பளம் குறைத்த ஹீரோ.. தலா ரூ 1 கோடி அளவில் 3 படத்துக்கு குறைப்பு..

இசை அமைப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக்காரன், சலீம், கொலைகாரன் போன்ற பல படங்கள் ஹிட்டாக அமைந்தன. தற்போது நவீன் இயக்கத்தில் அக்னிசிறகுகள், செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் ஆகிய 3 படங்களில் நடிக்கிறார். கொரோனா வைரஸ் லாக்டவுனால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பளர்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து தனது தயாரிப்பளர்களுக்கு உதவும் வகையில் விஜய் ஆண்டனி தற்போது தான் நடிக்கும் 3 படங்களிலும் தனது சம்பளத்தை தலா 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக கூறியிருக்கிறார். அதாவது தலா ஒரு படத்துக்கு சுமார் ரூ. 1 கோடி வரை குறைத்துக்கொள்கிறாராம்.விஜய் ஆண்டனியின் இந்த பெருந்தன்மையான போக்கைத் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் டி,சிவா வரவேற்றிருக்கிறார்.

More News >>