தலைவலி நீங்க எளிய வழிகள்
அடிக்கடி தலைவலியால் துன்பப்படுகிறீர்களா..? முதலில் தலைவலி ஏற்படக் காரணங்களை தெரிந்து கொள்வோம்:-
உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், அல்லது வேலை செய்தல், மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்தல், தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் நம் தலையில் நீர்கோர்த்து கொண்டு தலைவலி ஏற்படுகின்றது.
இதனால் வைரஸ் பரவுவதற்கும், பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு, தலைபாரம், இருமல், சளித்தொல்லை போன்றவற்றோடு தொடர் தும்மலும் வரக்கூடும்.
ஆண்களைவிட பெண்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது. இதை வரும்முன் தடுப்பதுதான் சிறந்த வழி.
மழை மற்றும் குளிர்காலங்களில் ஸ்வெட்டர், தொப்பி போன்றவற்றை அணியாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு சுக்குக் காபி, இஞ்சி டீ, காய்கறி சூப் ஆகிய சூடான பானங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தலைக்கு குளித்த பிறகு தலையை காயவைக்க குறைந்தது 5 நிமிடமாவது ஒதுக்க வேண்டும். தலைவலி பிரச்சனை உள்ளவர்களுக்கு இலவச இணைப்பாக சளித்தொல்லையும் கண்டிப்பாக இருக்கும் என்பதால் அதை முதலில் விரட்ட முயற்சிக்க வேண்டும்.
தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. இதனால் உடலின் உள்ளுறுப்புகள் செயலிழக்க நேரிடும்.
தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் முதலில் சைனஸ் வகைகளில் ஒன்றான Sinusitis பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
எனவே, தலையில் அதிகமான நீர் தங்குவதால் ஏற்படும் சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சரியான தூக்கம் அவசியம். இவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிற நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளாலும் கூட அலர்ஜி ஏற்பட்டு தலையில் நீர் கோர்த்துக் கொள்ளலாம். எதனால் இந்தப் பிரச்னை வருகிறது என்பதை தெரிந்து கொள்ள அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்டிடம் காண்பிக்க வேண்டும்.
குறிப்பாக, காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். அல்லது, மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே இதற்கான மருந்துகளை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும் என்று விரும்பினால் அதற்கான சில பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ குறிப்புகளை இங்கே காணலாம்:-
1. கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.
2. திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.
3. துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். தலை பாரமாக இருக்கும் போது ஆவிப் பிடித்தால், இறுகியிருக்கும் சளியானது இளகி எளிதில் வெளியேறி, தலை பாரத்தில் இருந்து விடுதலைப் பெறலாம்,
4. கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.
5. நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
6. துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.
7. கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.,
8. வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.
9, முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.
10. கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலி குறையும்,
11. இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.
12. வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.
13. சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.
14. மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.
15. கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்
16. எலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
17. தலை பாரத்தை சரிசெய்வதில் உப்பு ஒரு சிறந்த பொருள். காலை எழுந்த உடன் உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். அதிலும் அந்த நீரை தொண்டையில் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதனால் சளி உடனே வெளியேறி, தலைவலியில் இருந்து நிவாரணம் தரும்.
இவ்வாறு பல வழிகள் உள்ளன. நமக்கு ஏற்ற வழிகளை தேர்வு செய்து தலைவலியை விரட்டி நலம் பெறுவோம்.
You May Like:
தலையே வெடிக்கிற அளவிற்க்கு தலை வலியா ?? அப்போ முதல்ல இதை செய்யுங்க..
தலை வலிகளில் விதங்க உண்டு. ஒற்றை தலை வலி, தலை பாரம் என ஒவொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும். சிலருக்கு சுத்தியில் ஓங்கி மண்டையில் அடித்தால் போன்ற வலி இருக்கும். தலை வலியை போக்க கூடிய சில வீட்டு வைத்தியங்கள்..
இரவில் மது, காலையில் தலைவலி... தீர்வு இதோ!
மது அருந்திவிட்டு படுக்க செல்கையில் கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவவை உருவாகும்.ஆல்கஹால் காரணமாக கணையம் அதிக இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும்.
தலையின் எடை 27 கிலோ! - ஆபத்தின் அறிகுறியான கழுத்து வலி
ஆமைக் கழுத்து என்று தமிழ்ப்படுத்தப்படும் 'டர்டைல் நெக்', 'டெக்ஸ்ட் நெக்', 'டெக் நெக்' என்றறியப்படும் பாதிப்புகளுக்கு ஆரம்ப நிலையில் சரியான விதத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் முதுகெலும்பிலுள்ள வட்டுகளுக்கு சேதாரத்தை உண்டு பண்ணி, முதுகெலும்பு பாதிக்கப்பட காரணமாகி விடும்.தோள்பட்டை வலி, கைவிரல்கள் மரத்துப்போதல், தலைவலி ஆகியவை ஆமைக்கழுத்துப் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
ஏசி அறையில் வாழ்க்கையா..? நோயோடு வாழத் தயாராகுங்கள்!
ஓட்டல், அலுவலகம், சினிமா தியேட்டர் என எங்கு சென்றாலும் ஏசி இல்லாமல் இருக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. ஏசி வாங்கும் அளவுக்கு பணம் இருந்தால், எதைப் பற்றியும் யோசிக்காமல் வாங்கிவிடும் மனோபாவம் உயர்ந்து வருகிறது.
ஆரோக்கியமான சுக்கு மல்லி காபி செய்வது எப்படி?
அக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் கை வைத்தியமான சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் நின்றுவிடும்.
பாட்டி வைத்தியம்:பயனுள்ள பத்து மருத்துவ குறிப்புகள்
அந்த காலத்தில் ஏதாவது நோயோ அல்லது அழகு அதிகரிக்க யாரும் மருத்துவரிடம் செல்லமாட்டார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் பாட்டிகளே சிறந்த மருத்துவர்களாக இருந்தனர். இப்பொழுது பாட்டிகள் இல்லை ஆனால் அவர்களால் உருவாக்கிய அழகு குறிப்புகள் இன்றும் நம்மை மேம்படுத்துகின்றன.
மன அழுத்தம், நன்மையா? தீமையா?
சில நேரங்களில் நமக்கு நேரிடும் அழுத்தத்தின் காரணமாக, உத்வேகம் பெற்று இலக்குகளை குறித்த நேரத்தில் அடைந்துவிடுகிறோம்; வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறோம். ஆனால், உறவுகளால், பொருளாதார நெருக்கடிகளால், பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் கிண்டலுக்கு உள்ளாவதால், பயணம் செய்யும் போது வரும் தொல்லைகளால் ஏற்படும் மனஅழுத்தம், எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது.