தெலங்கானாவில் மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தெலங்கானாவில் மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், 50 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஷாப்பிங் மால், தியேட்டர் உள்ளிட்டவை தவிர பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தெலங்கானாவில் ஊரடங்கு மே29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், தெலங்கானாவில் இது வரை 1098 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 628 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. எனவே, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையைத் தவிர மற்றவை மூடப்பட்டிருக்கும். மக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

More News >>