மாதவனுக்கு கேர்ள் பிரண்ட் கிடையாதாம்.. அவரே சொல்கிறார்..
அலைபாயுதே படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல் மாதவன் இளம்பெண்களின் மனதை அலைபாயவிட்டது ஊருக்கே தெரியும் அவரோ தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனக்கு கேர்ள் பிரண்டே இருக்கவில்லை என்கிறார்.இதுபற்றி அவர் கூறியதாவது : எனக்கு கேர்ள் பிரண்டுன்னு யாரும் இருந்ததில்லை. இதை சொன்னா யாரும் நம்பமாட்டார்கள். சினிமாவில் நான் சாதித்திருக்குகிறேன் என்று சொன்னால் அது எல்லாமே எனக்கு அமைந்த விஷயங்கள்தான். யாரிடமாவது எதையாவது கற்றுக் கொள்ளவேண்டுமென்றால் ஒரு வெறியாக இருந்து கற்றுக்கொள்வேன். எனக்காக அவர்கள் செய்த சில விஷயங்கள் அவர்களுக்காக நான் செய்தவை இதெல்லாம் தான் என்னை இந்தளவுக்கு உயர்த்தி இருக்கிறது.
இந்த கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் எல்லோருக்குமே ஒரு வித ஸ்ட்ரெஸ் உள்ளது. அதிலிருந்து அவர்கள் வெளி வரவேண்டும். கொரோனவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள அரசு, அதிகாரிகள்., போலீசார், டாக்டர்கள் நர்ஸ்கள், அரசியல்வாதிகள் எல்லோருக்கும் நன்றி சொல்லவேண்டும். வெளி நாடுகளில் தொற்று பரவியதுபோல் இங்குப் பரவி விடக்கூடாது என்று ரிஸ்க் எடுத்து முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு மாதவன் கூறி உள்ளார்.மாதவன் தற்போது 'ராகேட்டரி தி நம்பி எபெக்ட்: என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.