காதலியை சந்தித்தது எப்போது? விஷ்ணுவிஷால் ஓபன் டாக்..

நடிகர் விஷ்ணு விஷால் ராட்சஷசன் பட வெற்றிக்குப் பிறகு பிசியாக இருக்கிறார். தற்போது மோகன்தாஸ் காடன், எப் ஐ ஆர் படங் களில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தாலும் இணையதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவரிடம் ரசிகர் ஒருவர், 'உங்கள் காதலி பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை முதன்முறையாக எப்போது சந்தித்தீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த விஷ்ணு, 'நடிகர் விஷாலின் தங்கை திருமண சங்கீத் நிகழ்ச்சியில் தான் முதன்முறை சந்தித்தேன்' என்றார்.விஷ்ணுவும் ஜுவாலாவும் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

More News >>