சுப்ரமணியபுரம் சுவாதியைத் துரத்தும் பழைய நினைவுகள்.. லேண்ட்லைன், தூர்தர்ஷன்போதும்..

1980கள் பின்னணியில் நடந்த கதையாக உருவானது சுப்ரமணியபுரம். சசிகுமார், ஜெய் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் சுவாதி. மேலும் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் திடீரென்று கடந்த 2 வருடத்துக்கு முன்பு தனது பாய் பிரண்டு விகாஸ் வாசு என்பவரை மணந்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனாலும் பேஸ்புக் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பெயரில் அடிக்கடி பதிவுகள் வருகின்றன.

இதுகுறித்து நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார் சுவாதி. அவர் கூறியதாவாது: ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து கடந்த 2011 ம் ஆண்டே விலகிவிட்டேன். அதேபோல் டிவிட்டரில் என் பெயரில் யாரோ மெசேஜ் போடுகிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் தான் நான் தற்போது இருக்கிறேன். என் பெயரில் செயல்படும் போலி டிவிட்டர், ஃபேஸ்புக் பற்றி என் கவனத்துக்குச் சிலர் கொண்டு வந்தனர். நான் அதிகமாக மெசேஜ் அல்லது என்னைப் பற்றிய விவரங்களையோ அல்லது பழைய சம்பவங்களையோ தொடர்ச்சியாக வெளியிடும் அளவுக்கு சக்தி கொண்டவள் கிடையாது. இதுவொரு பொருட்டல்ல என்றாலும் அதில் வரும் ஊளறல்கள் குடும்ப பெண்களுக்கு ஏற்றதாக இல்லை.

போலி சுயவிவரங்கள், போலி கட்டுரைகள், போலி பதிவுகள், போலி உறவு தரநிலைகள், போலி படங்கள், போலி நேர்மறை. 90களில் என்னை மீண்டும் அழைத்துச் செல்லுங்கள், அங்கு ஒரு லேண்ட்லைன் அதிக தரமான உரையாடல்களை உறுதிசெய்தது. ஒரு தூறல் காரணமாக மின்வெட்டு. ஒரு தூர்தர்ஷன் போதுமான தூண்டுதலாக இருந்தது.இவ்வாறு கூறி உள்ளார் சுவாதி.

More News >>