2020 இப்படியேபோனா இப்படி ஆயிடுவேன்.. கயல் ஹீரோ ஷாக் லுக்..

கயல் படத்தில் ஹீரோவாக நடித்தவர் சந்திரன். எப்போதும் இளமையாக காட்சி தரும் இவர் தனது இணையதள பக்கத்தில் மீசை தாடி நரைத்த வயதான தோற்ற புகைப்படத்தை வெளியிட்டு 2020ம் ஆண்டு இப்படியே போனால் நான் இப்படி ஆகிவிடுவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது வயதான தோற்றத்தை பார்த்த சிலர், ஆளே அடையாளம் தெரியலேயே என்று கமெண்ட் பதிவிட்டிருக்கின்றனர். எடிட்டிங்கில் சில சித்து வேலைகள் செய்து சந்திரன் இப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.சந்திரன் தற்போது பார்ட்டி, ரூபாய், திட்டம்போட்டு திருட கூட்டம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

More News >>