டெல்லி ஐ.ஐ.டி. தயாரிப்பில் பாதுகாப்பான முகக்கவசம்..
டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் வடிவமைத்துக் கொடுத்த பாதுகாப்பான முகக் கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவியதை அடுத்து டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி அனைவருமே முகக் கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு முகக்கவசங்களை தயாரித்து வருகின்றன. டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கென டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், மிகவும் பாதுகாப்பான என்-சேப் முகக் கவசங்களை வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து டாக்டர் அனுசூயா ராய் கூறுகையில், இந்த முகக்கவசம் 3 அடுக்குகளைக் கொண்டது. முதல் அடுக்கு ஹைட்டேராபிலிக் காட்டன், 2வது அடுக்கு மைக்ரோபிக் பில்டர், 3வது அடுக்கு எண்ணெய் மற்றும் தண்ணீரில் பரவும் வைரங்களைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது தினமும் 5 ஆயிரம் முகக் கவசம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மாதத்திற்கு 5 லட்சம் தயாரிக்கப்படும். இதன் விலையும் குறைவாகவே இருக்கும். இந்த முகக்கவசத்தை 50 முறை அலசி பயன்படுத்தலாம் என்றார்.