ஆன்லைனில் நடிப்பு கற்கும் விஜய் ஹீரோயின்.. ஹாலிவுட் நடிகை வகுப்பெடுக்கிறார்..

கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்ற பொன்மொழியை பின்பற்ற தொடங்கியிருக்கிறார் சமந்தா. ஆரம்ப காலகட்ட படங்களிலேயே நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். முன்னணி ஹீரோக்கள் மற்றும் சோலோ ஹீரோயின் படங்களில் நடித்த சமந்தாவுக்கு நடிப்பின் ஆழத்தைக் காண ஆசை வந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பைக் கற்கத் தொடங்கியிருக்கிறார்.

ஆங்கில நடிகை ஹெலன் மிர்ரென். சிறந்த நடிப்புக்குப் புகழ்பெற்றவர். இவரிடம் ஆன்லனில் நடிப்பு கற்பதாக சமந்தா தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது. இன்னும் சிறந்த நடிப்பைத் தர வேண்டும் என்பதால் இந்த வகுப்பில் சேர்ந்திருக்கிறேன். அப்படியில்லையென்றால் இந்த பதிவை நான் நீக்கிவிடுகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>