விஜய் வில்லன் சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாற்றம்.. கொரோனா ஊரடங்கில் புதிய தோற்றம்..

'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்தவர் சுதீப். விஜய் நடித்த 'புலி' மற்றும் பிரபாஸ் நடித்த 'பாகுபலி' படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் இருக்கும் சுதீப் உருப்படியான வேலையில் ஈடுபட்டார். வழக்கமான உடற்பயிற்சி என்றில்லாமல் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாற முடிவு செய்தார். இதற்காகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு, பயிற்சிகளில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார். அந்த புகைப்படங்களை நெட்டில் பகிர்ந்திருக்கிறார். சுதீப்பின் தோற்றத்துக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.

More News >>