பிரபாஸுக்கு வில்லன் ஆகும் அரவிந்த்சாமி..

'ரோஜா' பட ஹீரோ அரவிந்த் சாமி பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார். இடையில் சில வருடங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நடித்த 'தனி ஒருவன்' படத்தில் வில்லன் வேடத்தில் அவரை நடிக்க வைத்தார் இயக்குனர் மோகன்ராஜா.மீண்டும் ஜெயம் ரவி நடித்த 'போகன்'படத்தில் நெகடிவ் வேடம் ஏற்றார். அதன்பிறகு வில்லன் வேடங்களைத் தவிர்த்தவர் மீண்டும் ஹீரோவாக நடித்தார். 'வணங்க முடி', 'தலைவி' படங்களில் தற்போது நடிக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் நெகடிவ் வேடத்தில் நடிக்க உள்ளார் அரவிந்த்சாமி. 'பாகுபலி' ஹீரோ பிரபாஸ் நடிக்க நாக் அஸ்வின் இயக்கும் புதிய படம் உருவாகவிருக்கிறது. நாக் அஸ்வின் கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கியவர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

More News >>