புதிய படத்தில் காஸ்டியூம் டிசைனர் ஆன பிகில் நடிகை..

தளபதி விஜய் நடிக்க அட்லி இயக்கிய படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா, அம்ரிட்டா அய்யர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.பிகில் படத்தில் இடம்பெற்ற பெண்கள் கால் பந்து அணிக்கு கேப்டனாக நடித்தவர் அம்ரிட்டா. ஏற்கனவே படைவீரன், தெறி போன்ற படங்களில் சிறிய வேடங்களில் இவர் நடித்திருக்கிறார். பிகில் படம் அம்ரிட்டாவை ரசிகர்களுக்குப் பெரிதாக அடையாளம் காட்டியது.

அடுத்து லிஃப்ட் என்ற படத்தில் நடிக்கிறார். புதுஇயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார். இப்படத்தில் தனக்கு தானே காஸ்டியூம் டிசைனர் ஆகியிருக்கிறார் அம்ரிட்டா. இதுகுறித்து அவர் கூறும்போது.படத்தில் நடிப்பதுடன் அந்த படத்தில் உங்களுக்கு நீங்களே காஸ்டியூம் டிசைனர் ஆகிவிட்டால் முழு படத்துக்கும் ஒரே காஸ்ட்யூம் தான் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>