11ஆம் தேதி முதல் சினிமா பணிகள் தொடங்க அரசு அனுமதி.. போஸ்ட் புரொடக்ஷ்ன் மட்டும் தொடங்கலாம்..

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் கடந்த 50 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே திரைப்பட சம்பந்தப்பட்ட போஸ்ட் புரொடக்ஷன் தொழில் நுட்ப பணிகளைத் தொடங்கி கொள்ளவாவது அரசு அனுமதி தர வேண்டு மென்று தயாரிப்பாளர்கள், பெப்ஸி அமைப்பினர் தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுத்திருந்தனர். இதையடுத்து வரும் 11ஆம் தேதி முதல் சினிமாபோஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், சின்னதிரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதால் இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைச் செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த தமிழக முதலமைச்சர் தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5 2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள். 1. படத்தொகுப்பு (எடிடிங்) (அதிகபட்சம் 5 பேர்) 2 குரல் பதிவு (டப்பிங்) (அதிகபட்சம் 5பேர் ) 3. கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ் (வி எஃப் எக்ஸ்/சி ஜி ஐ ) (10 முதல் 15 பேர்) 4. டி ஐ எனப்படும் நிற கிரேடிங் (அதிகபட்சம் 5 பேர்) 5. பின்னணி இசை (ரீரெக்கார்டிங்) (அதிகபட்சம் 5 பேர்) 6 ஒலிக்கலவை ( சவுண்ட் டிசைன் மிக்ஸிங்)(அதிக பட்சம் 5பேர் ) எனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைச் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதிச் சீட்டு களைப் பெற்றுத் தந்து அவர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய -மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப் பாடுகளைப் பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More News >>