`பெருத்தnbspஏமாற்றம்..! nbspஐபிஎல் குறித்து ஜோ ரூட் வேதனை
உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. ஒரு புறம் இந்திய வீரர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்நேரத்தில், வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு ஆடுவதை விட ஐபில் போட்டிகளில் விளையாடுவதை முக்கியம் எனக் கருதி கால அட்டவனைகளை மாற்றுகின்றனர்.
இப்படிப்பட்ட தொடரில் முதன்முறையாக ஆடும் கனவோடு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட், ஏலத்துக்கு வந்தார். டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவனாக திகழும் ரூட், டி20-யில் சோபிக்கவில்லை என்பதால், ஐபிஎல் அணிகள் எதுவும் அவரை ஏலத்துக்கு எடுக்கவில்லை. இதனால், ரூட் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரூட், ‘ஐபிஎல் தொடரில் விளையாடலாம் என்று மட்டற்ற ஆசையுடன் இருந்தேன். ஆனால், எந்த அணியும் என்னை ஏலம் எடுக்கவில்லை என்பது பெருத்த ஏமாற்றம்தான். ஆனால், ஏலத்தில் எடுப்பது என் கட்டுபாட்டில் இல்லை. எனவே என்னால், அதை புரிந்து கொள்ளவும் முடிகிறது.
டி20 கிரிக்கெட்டில் என் திறமையை வளர்த்துக் கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நான் நினைத்திருந்தேன். அது நடக்கவில்லை. பணத் தேவைக்காக நான் ஐபிஎல் தொடரில் விளையாட ஆசைப்படவில்லை’ என்று தன் ஏமாற்றத்தைப் பகிர்ந்துள்ளார்.