போஸ்ட்-புரொடக்ஷன் அனுமதி.. முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி..

திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை 11ம் தேதி முதல் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்குத் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பினால் 50 நாட்களுக்கு மேலாகத் தமிழ்த் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த மே 4-ம் தேதி குறைந்த பட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து இந்த பணிகளுக்காக 50 நாட்களாகக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்து, படங்களைத் தயார் செய்ய முடியும் என்று தங்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.

எங்களின் கோரிக்கையைக் கனிவாகக் கவனித்து உடனே நடவடிக்கை எடுத்து, நாங்கள் கேட்டுக்கொண்டது போலவே, தமிழ்த் திரைப்படத் துறை போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை 11.5.2020 முதல் செய்து கொள்ள தாங்கள் அனுமதி அளித்து, தமிழ் சினிமாவை காக்கும் செயலை செய்ததற்காக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நேரத்தில் எங்களின் கோரிக்கையை தங்களின் கவனத்திற்கு உடனே கொண்டு வந்து அதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்த அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இதற்கான அறிக்கையில் இயக்குனர் பாரதிராஜா, கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன், கே.ஆர்.கே. முரளிதரன், டி. சிவா, கே. ராஜன், கே.எஸ். ஸ்ரீனிவாசன், பி.எல். தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர், கே.ஈ. ஞானவேல் ராஜா, எச். முரளி, கே.விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன், எஸ்.எஸ். துரைராஜ், பெப்சி சிவா, ஒநாட் எஸ்.சஷிகாந்த், ஜி. தனஞ்செயன், எஸ்.ஆர். பிரபு, ராஜசேகர் பாண்டியன், பி. மதன், ஜேஎஸ்கே. சதீஷ்குமார், சி.வி. குமார், விஷ்ணு விஷால், சுதன் சுந்தரம், சுரேஷ் காமாட்சி, இயக்குனர் மனோ பாலா, எம். திருமலை, டில்லி பாபு, எஸ். நந்தகோபால், எம். மகேஷ், ஆர்.கே. சுரேஷ், உதயா, வினோத் குமார், பி.எஸ். ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், பி.ரங்கநாதன், எம்.எஸ். முருகராஜ், டாக்டர். பிரபு திலக், கே.எஸ்.சிவராமன், நிதின் சத்யா, ராதாரவி, பஞ்சு சுப்பு, இயக்குனர் மனோஜ் குமார், மதுரை செல்வம், பஞ்ச் பரத், கின்னஸ் பாபு கணேஷ், எம். கஸாலி, பி.ஜி. முத்தையா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

More News >>