1 வருடத்துக்கு 1 ரூபாய் சம்பளம் போதும்.. காமெடி நடிகை அறிவிப்பு..

விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி ஹீரோ படங்கள் முதல் இளம் நடிகர்கள் படங்கள் வரை நடித்து வருபவர் காமெடி நடிகை ஆர்த்தி. இவர் கூறியதாவது :கொரோனா லாக்டவுனால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண், உதயா. இயக்குனர் ஹரி ஆகியோர் தங்கள் சம்பளத்தில் 25 சதவீதம் முதல் 40சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. நான் நடிக்கும் படங்களுக்கு இனி ஒரு வருடத்துக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுக்கொள்வேன்.

நான் நடிக்கும் படங்களில் உடன் ஐந்து அல்லது பத்து துணை நடிகர்கள், நாடக நடிகர்களை நடிக்க வையுங்கள். நான் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொள்கிறேன். என்னுடன் நடிப்பவர்களுக்கு எனக்காக நீங்கள் கொடுக்க ஒதுக்கிய சம்பளத்தை பிரித்துக்கொடுங்கள். இவ்வாறு ஆர்த்தி கூறி உள்ளார்.

More News >>