மாஸ்டர் பாடலுக்கு நடனம் ஆடிய மாற்று திறனாளி நடிகரின் கோரிக்கை.. விஜய், அனிரூத்துக்கு மெசேஜ்..

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தில் நடித்தவர் மாற்றுத்திறனாளி தான்சன். (இவர் லாரன்ஸ் நடத்தும் மாற்றுத் திறனாளி அமைப்பில் உள்ளவர்). கொரோனா லாக்டவுனில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றுக்கு 3 நாட்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டு நடனம் பழகினார்.மாற்றுத் திறனாளி தான்சனின் ஆசை என்னவென்றால் அனிரூத் இசையில் ஆட வேண்டும். விஜய் முன்னிலையில் ஆடிக் காட்ட வேண்டும் என்பது தான். அவரது ஆசையை நீங்கள் (விஜய், அனிரூத்) பூர்த்தி செய்துதர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என விஜய், அனிரூத்திற்கு மெசேஜ் அனுப்பியதுடன் மாற்றுத்திறனாளி நடனம் ஆடும் வீடியோ லிங்க்கையும் அனுப்பி வைத்துள்ளார் லாரன்ஸ்.

More News >>