மாற்றுத் திறனாளியை நேரில் சந்திக்க விஜய், அனிரூத் ஒப்புதல் ..

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது மாற்றுத் திறனாளி நடன குழுவிலுள்ள தான்சன் என்ற மாற்றுத் திறனாளி, மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற, வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார். இதுகுறித்து விஜய், அனிரூத் இருவருக்கும் லாரன்ஸ் மெசேஞ் அனுப்பி தகவல் தெரிவித்திருந்ததுடன் விஜயை நேரில் சந்திக்கவும், அனிரூத் இசையில் நடனம் ஆடவும் அனுமதி கேட்டிருந்தார். அதற்கு இருவரும் பதில் அளித்திருக்கின்றனர்.

லாரன்ஸ் மெசேஜை கண்ட விஜய் அவருடன் தொலைப்பேசியில் பேசினார். அப்போது கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தான்சனை சந்திப்பதாகக் கூறினார். அதேபோல் லாரன்சுடன் பேசிய அனுரூத். தன் இசையில் தான்சனை ஆட வைப்பதாகக் கூறினார். இதையறிந்து தான்சன் மகிழ்ச்சி அடைந்தார்.

More News >>