ராணுவ பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்திய சீனா!

சீனா தனது நாட்டின் ராணுவ பாதுகாப்பு பட்ஜெட்டை பல மடங்காக உயர்த்தியுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சீனா சமீபத்திய தனது நாட்டின் பட்ஜெட்டில் ராணுவ பாதுகாப்புக்காக மட்டும் அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த சீன பாதுகாப்பு பட்ஜெட் 150.5 பில்லியனாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 8.1 சதவிகிதம் உயர்த்தி 175 பில்லியனாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் உலகிலேயே ராணுவ பாதுகாப்புக்காக அதிகம் செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சீனா பட்ஜெட் இந்திய ராணுவப் பாதுகாப்பு பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

இன்றைய சூழலில் இந்திய பாதுகாப்புத் துறையின் பட்ஜெட் 150.5 பில்லியனாக உள்ளது. சீன தனது ராணுவ தளவாடங்கள் மட்டுமல்லாது கடலோரக் காவல்படையையும் பெருக்கி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவ பட்ஜெட் குறைவாகவே ஒதுக்கப்பட்டதை ஈடுகட்டவே தற்போதைய ராணுவ பட்ஜெட் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் இம்முறை வெறும் ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள் வாங்க மட்டும் நிதி ஒதுக்காமல் ராணுவ வீரர்களின் மற்றும் அவர்களின் குடும்பத் தேவைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

More News >>