சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மஹத் ராகவேந்திரா முடிவு..

கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியிருக்கிறது, படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது, புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர்கள். விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பாதிக்கப்பட்டிருகின்றனர். அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் திரைப்பட இயக்குனர் ஹரி, நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண், அருள்தாஸ், நடிகை ஆர்த்தி போன்ற சிலர் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கின்றனர்.

சென்னை 28 இரண்டாம் பாகம், வல்லவன், மங்காத்தா, வந்தா ராஜாவாகத் தான் வருவேன், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதுடன் புதுமுக இயக்குனர்கள் மேக்வென் இயக்கும், இவன் தான் உத்தமன் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் மஹத் ராகவேந்திராவும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாகத் தனது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார்.

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் மஹத் ராகவேந்திரா கூறியிருப்பதாவது:தனது சம்பளத்தைக் குறைத்துக்கொள்வது குறித்து மஹத் ராகவேந்திரா கூறியுள்ளதாவது ;இன்றைக்கு சமூகமும் சினிமாவும் இருக்கும் சூழலில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள முன் வந்துள்ளார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. நானும் கடந்த பத்து வருடங்களாக இந்த திரையுலகிலிருந்து வருகிறேன்.. சில படங்களில் நடித்துள்ளேன்.. இன்னும் நிறையப் படங்கள் பண்ணவேண்டும் என ஆசைப்படுகிறேன்.. இப்போதுதான் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக நிலவி வரும் இந்த ஊரடங்கு சூழலில் சினிமா தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது நம்மை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான்.. திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கூட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த மூன்று தரப்பினரும் சேர்ந்து முடிவெடுத்து, எங்களுக்கு இவ்வளவு தான் கட்டுப்படியாகும், உங்களுக்கு இவ்வளவு தான் சம்பளம் கொடுக்க முடியும் என அறிக்கை வெளியிட்டார்கள் என்றால் அதற்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன். ஏனெனில் திரையரங்குகளுக்கு மக்கள் வர நாட்களாகும். பாதிக்கு மேலான சுமை தயாரிப்பாளர்களுக்கு இருக்கு. எப்படிப் போட்ட பணத்தை எடுக்கப் போகிறார்கள் என்பதே பெருங்கேள்வியாக உள்ளது. இந்த சமயத்தில் சக கலைஞர்கள் பாதியளவாவது விட்டுக் கொடுக்க முன்வந்தால் நல்லது.

என்னைப் பொறுத்தவரையில் அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் குறைத்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என்னைப்போல வளர்ந்துவரும் நிறைய நடிகர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன். என்றுமே ஒரு நடிகனுக்குச் சம்பளத்தையும் தாண்டி நிறையப் படங்கள் பண்ணனும், நிறைய கேரக்டர்களில் நடிக்கணும் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும் இவ்வாறு மஹத் ராகவேந்திரா கூறி உள்ளார்.

More News >>